Sunday, December 27, 2015

செங்கல்பட்டு பெயர் காரணம்!!

செங்கல்பட்டு (ஆங்கிலம்:Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு வட்டத்தின் தலைமையகமான ஒரு நகராட்சி ஆகும்செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். இது சென்னையின் நுழைவாயில் எனஅழைக்கப்படுகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர்.எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டதுஅது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

சங்கப்பாடல் தரும் செய்திகள்

·         வையை ஆற்று வெள்ளத்தில் வந்த மலர்களில் ஒன்று கழுநீர்.
·         திருப்பரங்குன்றச் சுனை கச்சிமாநகர மதில்புற அகழி  முதலான இடங்களில் பூத்திருந்தன.
·         எருமை தாமரையை விட கழுநீரை விரும்பி மேயும்
·         மாலையாகத் தொடுப்பர்
·         காதலர் படுக்கையில் தொங்கும் சரமாகப் பயன்படுத்தப்பட்டது
·         கோவலனும் மாதவியும் குவளை, கழுநீர் மலர்ப் படலை (படுக்கைக்கு மேலே தொங்கும் சரம்) மேல் மகிழ்ந்திருந்தனராம்
·         கோவலனும், கண்ணகியும் சேர்ந்து மகிழ்ந்தபோது மல்லிகை மாலையும் கழுநீர்ப் பிணையலும் அணிந்திர்ந்தனராம்
·         கோவலனும் கண்ணகியும் இடைநிலை மாடத்தில் இருந்தபோது வீசிய தென்றல் காற்றில் பல மலர்களின் மணம் வீசிற்றாம். அவற்றில் ஒன்று கழுநீர்ப்பூவின் மணம்.
·         கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை நடுவில் வைத்து ஒப்பனை செய்வதற்கு பல மலர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று செங்கழுநீர். இது வேரோடு வைத்து ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. (பிற: சண்பகம்மாதவிதமாலம், கருமுகை, மல்லிகை, கத்திகை
·         வைகையில் நீராடிய மகளிர் மணலில் பாவை எழுதினர். கயத்தில் பூத்திருந்த கழுநீர்ப் பூக்கள் வெள்ளத்தில் வந்து எழுதிய பாவை மேல் நின்றுவிட்டது என அவர்கள் அழுதனராம்
·         கண்ணீர் விழுதலைக் கூறும்போது கழுநீர் மலர் உவமையாக்கப்படும்

No comments:

Post a Comment