Monday, September 7, 2015

ஊர் மணம் !!!

காஞ்சிபுரம்!!!!!! பெயரைக் கேட்டாலே கோவில் நகரம் என்று தான் நினைவுக்கு வரும் அல்லது காஞ்சிபுரத்தின் பட்டு நினைவுக்கு வரும். ஆனால் இத்தகைய பெருமைகள் உடைய எங்கள் காஞ்சிபுரத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு அதுதான் காஞ்சிபுரத்தின் கைமணத்திற்கு பெருமை சேர்க்கும் ”காஞ்சிபுரம் இட்லி”. காஞ்சிபுரம் இட்லியின் பிறப்பிடம் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவில்.


இதன் சிறப்பு அம்சம் இதில் சேர்க்கப்படும் பொருட்களான மிளகு,சீரகம்,கறிவேப்பிலை,சுக்கு,பெருங்காயம் சேர்ந்து தரும் சுவை ஆகும். இந்த இட்லியானது பாரம்பரிய முறையில் மந்தாரை இலையில் ஆவியில் வேகவைத்து தயார் செய்யப்படுகிறது. இதுதவிர்த்து காஞ்சிபுரம் கனக விலாஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் தங்கள் பாணியில் காஞ்சிபுர கோவில் இட்லி தயார் செய்கின்றனர். எனவே காஞ்சிபுரம் சென்றால் காஞ்சிபுர கோவில் இட்லியை சுவைக்க மறவாதீர்கள்!!!!!